அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை; தலைசுற்றிப்போன பயணிகள் - அதிர்ச்சி சம்பவம்!

China Dindigul
By Swetha Apr 26, 2024 05:36 AM GMT
Report

அரசுப் பேருந்து பலகையில் திடீரென சீன மொழியில் இருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியை அடைந்தனர்.

அரசு பேருந்து

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து பயணிக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்ப்பாக தெப்போது பெரும்பாலான பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை; தலைசுற்றிப்போன பயணிகள் - அதிர்ச்சி சம்பவம்! | Board In Chinese On Government Bus

இந்த பேரியல் பலகைகள் அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது. குறிப்பாக இரவில் அதிக பிரகாசமாக ஒளிரும். இந்தச்சூழலில், பழனியில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவில் சென்றுகொண்டு இருந்தது. அந்த பேருந்து இடையில் பொள்ளாச்சிக்கு செல்லும் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

 சீன மொழி

இதையடுத்து, அங்கு காத்திருந்த பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முயன்றனர் ஆனால், டிஜிட்டல் பலகையில் ஒளிர்ந்து கொண்டிருந்த பெயரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் சீன மொழி வாசகம் இடம்பெற்று இருந்தது. இதனால் குழப்பத்தின் உச்சத்துக்கு சென்ற பயணிகள், அதில் ஏற தயக்கம் காட்டினர்.

அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை; தலைசுற்றிப்போன பயணிகள் - அதிர்ச்சி சம்பவம்! | Board In Chinese On Government Bus

சிலர் கண்டக்டரிடம் எந்த இடத்திற்கு பயணிக்கிறது என்று கேட்டு ஏறினார்கள். ஒருசிலர் மொழி புரியாததால் அந்த பஸ்சில் ஏறவில்லை. இதனிடையே இந்த பலகை ஏன் சீன மொழியில் இருந்தது என்று தெரியவந்துள்ளது. அதாவது, டிஜிட்டல் பலகை செயல்படுவதற்கான மென்பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது.

எனவே அதனை இயக்கும்போது முதலில் சீனமொழியே வரும். அதன்பிறகு அதை மாற்றியமைக்க வேண்டும். ஆனால், அதை மாற்ற டிரைவரும், கண்டக்டரும் மறந்துவிட்டதால் தான் இது நடந்தது என்று கூறுகின்றனர்.