ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் - மாதந்தோறும் கட்டணமா..!

Twitter Elon Musk
By Sumathi Dec 12, 2022 05:24 AM GMT
Report

இன்று முதல் ட்விட்டரில் மீண்டும் ‘புளூ டிக்’ வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ட்விட்டர்

ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, பெயருக்கு அருகில் புளூ டிக் குறிக்கப்படும். இதன் அடிப்படையில், பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் - மாதந்தோறும் கட்டணமா..! | Blue Tick Feature Is Back On Twitter

தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், டுவிட்டரில் புளூ டிக் வசதியை பெற மாதந்தோறும் சுமார் ரூ.659 கட்டணமாக அறிவித்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்த நிலையிலும் எலான் மSக் முடிவில் மாறவில்லை.

புளூ டிக்

இதற்கிடையில், ட்விட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின. இதன் காரணமாக டுவிட்டரில் 'புளூ டிக்' வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில், இன்று முதல் மீண்டும் புளூ டிக் வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.