நீல கலர்ல முட்டை போட்ட கோழி; அடித்த ஜாக்பாட் - குவியும் மக்கள்!

Karnataka Viral Photos
By Sumathi Aug 28, 2025 11:31 AM GMT
Report

ஒரு கோழி நீல நிற முட்டையிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீல நிற முட்டை

கர்நாடகா, நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சையத் நூர். இவருக்கு சொந்தமான ஒரு கோழி, வழக்கமாக வெள்ளை நிற முட்டைகளை இட்டு வந்த நிலையில், திடீரென நீல நிற முட்டை ஒன்றை இட்டுள்ளது.

நீல கலர்ல முட்டை போட்ட கோழி; அடித்த ஜாக்பாட் - குவியும் மக்கள்! | Blue Egg Laid By Hen In Karnataka Viral

இந்த அரிய முட்டையைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதுகுறித்து பேசியுள்ள உரிமையாளர்,

AI சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் - கதறும் பெற்றோர்!

AI சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் - கதறும் பெற்றோர்!

மக்கள் ஆச்சர்யம்

"என்னிடமிருந்த 10 கோழிகளுக்கும் ஒரே உணவைத்தான் கொடுத்தேன். மற்ற கோழிகள் வெள்ளை அல்லது மஞ்சள் நிற முட்டைகளை இடுகின்றன. ஆனால், இந்த கோழி மட்டும் முதன்முறையாக நீல நிற முட்டையை இட்டது" என தெரிவித்துள்ளார்.

நீல கலர்ல முட்டை போட்ட கோழி; அடித்த ஜாக்பாட் - குவியும் மக்கள்! | Blue Egg Laid By Hen In Karnataka Viral

மேலும், "பச்சை கலந்த மஞ்சள் நிற முட்டைகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த கோழி இட்ட நீல நிற முட்டை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கோழிகள் அரிதாகவே இப்படிப்பட்ட முட்டைகளை இடும்.

கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவெர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக இது நடந்திருக்கலாம்" என்று விலங்கு வளர்ப்பு மற்றும் கால்நடை சேவைகள் துறையின் உதவி இயக்குநர் டாக்டர் அசோக் கூறியுள்ளார்.