நாட்டையே நடுங்க வைத்த நீல நண்டு; அழிக்க போராடும் அரசு - அப்படி என்ன காரணம்?
நண்டு இனத்தை சமாளிக்க அரசு ரூ.26 கோடியை ஒதுக்கியுள்ளது.
நீல நண்டு
இத்தாலியில் மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய `நீல நண்டு' பல இடங்களில் பரவி உள்ளுர் மட்டி மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடுகிறது. தற்போது, நீல நண்டுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவிட்டது.
இதனால் நத்தைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக அங்குள்ள மக்கள் வேதனையடைந்துள்ளனர். ஆனால் இதன் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ரூ.26 கோடி ஒதுக்கீடு
சரக்குக் கப்பல்கள் மூலம் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். இதனால் இத்தாலியின் பல பகுதிகளில் இருந்து தினமும் 12 டன் வரை நண்டுகளை அழித்து வருகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அழிவை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நண்டு இனத்தை சமாளிக்க அவசர பட்ஜெட் என்று இந்திய மதிப்பில் ரூ.26 கோடியை ஒதுக்கியுள்ளது.
தொடர்ந்து, இத்தாலி நாட்டு விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லோலோபிரிகிடா போ நதி பள்ளத்தாக்கின் டெல்டாவை பார்வையிட்டார். இது குறித்து பேசிய அவர், ஆக்கிரமிப்பு நண்டுகளை சமாளிக்க அவசர நிதியை அறிவித்ததோடு, டெல்டா பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களால் இயன்ற நண்டுகளைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.