ரத்தத்தில் ஓவியம்: காதலை காட்ட வேறு வழிகள் இருக்கு - அமைச்சர் கடும் எச்சரிக்கை!
ரத்தத்தில் ஓவியம் வரையும் நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரிசோதனை
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை பணிகளையும், விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சீனாவில் இருந்து தென்கொரியா இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய இரத்த மாதிரிகள் இன்று சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு அது எந்த வகை தொற்றை சேர்ந்தது என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
பிளட் ஆர்ட்
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் கம்போடியாவில் இருந்து வந்த ஒருவரும் , துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர். மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்.
அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகத்தில் புதிய கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவது. இதனை ஒரு தொழிலாகவே பலர் செய்து செய்து வருக்கின்றனர். இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
சென்னையில் பிளட் ஆர்ட் நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரகள் எச்சரித்துள்ளனர். சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. ரத்த ஓவியங்கள் தான் அதற்கான வழி என்று கூறுவது தவறு எனத் தெரிவித்துள்ளார்.