3 ஆண்டுகளாக உழைத்து... தன் வீட்டை Doodle ஓவியங்களால் அழகுப்படுத்திய கலைஞர் - வீடியோ வைரல்...!
3 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, டூடுல் ஓவியங்களால் தன் வீட்டை அழகுப்படுத்திய ஓவியரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Doodle ஓவியங்களால் வீட்டை அழகுப்படுத்திய ஓவியர்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் காக்ஸ் என்ற ஓவியர் ‘மிஸ்டர் டூடுல்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தன் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், படுக்கையிலிருந்து குளியல் தொட்டி வரை டூடுல்களால் அலங்கரித்துள்ளார்.
சாம் காக்ஸ் இந்த கலைப் படைப்பை உருவாக்க சுமார் 3 ஆண்டுகள் செலவழித்துள்ளார். காக்ஸ் தன் திட்டத்தை முடிக்க 900 லிட்டர் வெள்ளை பெயிண்ட், 401 கேன்கள் கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட், 286 பாட்டில்கள் கருப்பு டிராயிங் பெயிண்ட் மற்றும் 2296 பேனா நிப்களைப் பயன்படுத்தியுள்ளார்.
40 வயதாகும் சாம் காக்ஸ் உலகின் 5வது வெற்றிகரமான கலைஞராக புகழ்பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகான ஓவியங்கள் நிறைந்த வீட்டை, தன் மனைவி அலெனாவுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.