மக்களே அபாயம்; கண்களில் ரத்தம் வழிய..வழிய.. கொல்லும் வைரஸ் - இந்த அறிகுறிகள் இருக்கா?
புதிதாக Bleeding Eye வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
ப்ளீடிங் ஐ வைரஸ்
மார்பர்க் வைரஸ் எனப்படும் ப்ளீடிங் ஐ வைரஸ் பரவி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளது. பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட
இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்குப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பழம் தின்னும் வௌவால் இனமான ரூசெட்டஸ் ஏஜிப்டியாகஸ் என்ற வகை வௌவால்களில் தான் இந்த மார்பர்க் வைரஸ் இருக்கும். இந்த வைரஸ் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
கொல்லும் வைரஸ்
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்று வலி, தொண்டை புண், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, சொறி, மூக்கு, ஈறுகளில் இருந்து இரத்தம், போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
நோயின் தீவிரம் அதிகமாகிய எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குள் அதிகபடியான இரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சிக்குப் பிறகு மரணம் கூட ஏற்படலாம். இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
இந்த வைரஸ் நோய் பாதிப்புள்ள நபர்களின் உடல் திரவங்கள், படுக்கை மற்றும் ஆடை போன்ற பொருட்களுடன் தொடர்பு கொள்வது மூலம் பரவுகிறது.இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி,
முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இந்த நோயால் சுமார் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.