கண்களில் வழியும் ரத்தம்; பரவும் ப்ளீடிங் ஐ வைரஸ் - பகீர் கிளப்பும் பாதிப்பு!

Cold Fever Brazil Virus Africa
By Sumathi Dec 03, 2024 11:45 AM GMT
Report

புதிதாக Bleeding Eye வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

ப்ளீடிங் ஐ வைரஸ்

மார்பர்க் வைரஸ் எனப்படும் ப்ளீடிங் ஐ வைரஸ் பரவி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளது.

bleeding eye virus

பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்குப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பழம் தின்னும் வௌவால் இனமான ரூசெட்டஸ் ஏஜிப்டியாகஸ் என்ற வகை வௌவால்களில் தான் இந்த மார்பர்க் வைரஸ் இருக்கும். இந்த வைரஸ் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

உங்களின் இறுதி நாள் இதுதான்.. மரணம் நிகழும் தேதியை குறிக்கும் திகில் ஆப்!

உங்களின் இறுதி நாள் இதுதான்.. மரணம் நிகழும் தேதியை குறிக்கும் திகில் ஆப்!

அறிகுறிகள் 

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3வது நாளில் இருந்து தொடங்கும். எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.

கண்களில் வழியும் ரத்தம்; பரவும் ப்ளீடிங் ஐ வைரஸ் - பகீர் கிளப்பும் பாதிப்பு! | Bleeding Eye Virus India Symptoms Precautions

நோயாளிகளின் ரத்தம், உள்ளிட்ட உடலின் பிற திரவங்கள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் படுக்கை, உடை ஆகியவற்றைத் தொடும் போது இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த கொடூர வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மார்பர்க் மட்டுமின்றி கிளேட் 1 மற்றும் ஓரோபூச் காய்ச்சலும் இங்குப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.