சரியா தூங்காவிட்டால் இவ்வளவு ஆபத்தா? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்!
முறையற்ற தூக்கம் குறித்து மருத்துவர்கள் அண்மையில் ஆய்வு செய்து வந்தனர்.
தூக்கம்
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான் ஒன்றாகும். இதில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடலுக்குள் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். முறையற்ற தூக்கமானது மாரடைப்பு பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்க செய்கிறதாம்.
இது தொடர்பாக மருத்துவர்கள் அண்மையில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி இதழ் நிர்வாகத்தினர் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட தூக்கமுறை குறித்து கேட்டு அறிந்தனர்.
அதிர்ச்சி தகவல்
அதாவது, தினமும் 8 மணி நேரம் ஒவ்வொருவரும் தூங்க வேண்டும். ஒருவர்உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்த தூக்கம்முறையற்றது என கூறப்படுகிறது.இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைபாதிக்கும்.
அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் ஏற்படும் முறையற்ற தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும். உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி போன்றவற்றில்
ஏதாவது ஒரு பயிற்சியை பின்பற்ற வேண்டும் என ஆய்வாளர்களும் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆரோக்கியமான உணவு பழக்கம், வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் இரவில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.