கொரோனாவை விட கொடியது..புதிய வைரஸால் அடுத்தடுத்து 15 பேர் மரணம்- எச்சரிக்கும் WHO
ரத்தப்போக்கு கண் வைரஸ் நோயால் ருவாண்டாவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் மார்பர்க் என்றழைக்கப்படும் ரத்தப்போக்கு கண் வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. ருவாண்டாவில் இந்த புதிய வைரசால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கபட்ட நிலையில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்பர்க் வைரஸ்
மார்பர்க் வைரஸ் என்பது ஒரு கடுமையான நோயாகும். இது எபோலா குடும்பத்தைச் சேர்ந்தது. இது வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் கடுமையான ரத்தக்கசிவு வெளிப்படும். இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு 50 சதவீதம் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது மிகவும் கொடிய வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நோய் முதன்முதலில் 1967-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள மார்பர்க் மற்றும் பிராங்பர்ட்டில் கண்டறியப்பட்டது.
அறிகுறிகள்
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி.
உலகின் 17 நாடுகளில் மார்பர்க், mpox, orpouche போன்ற வைரஸ்கள் பரவி வருவதால், அதிகம் பயணப்படுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.