உணவில் பிளேடு துண்டா? - பார்சல் வாங்கிய பெண் ஷாக்!
உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கிய பெண் அந்த உணவில் பிளேடு துண்டு கிடந்ததில் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உணவகம்
மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது, இவரது மனைவி நேற்று மதியம் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அந்த உணவகத்திற்கு சென்று ஊழியரிடம் உணவில் பிளேடு கிடந்ததை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து முகமது உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.
உணவு பாதுகாப்பு துறை
இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.
விசாரணை நடத்தியதில் அங்கு உள்ள பணியாளர்கள் மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல், உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.