விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘பிளேடு’ - ஆனால், நிறுவனம் செய்த செயலை பாருங்க..

Bengaluru Flight Air India
By Karthikraja Jun 18, 2024 07:49 AM GMT
Report

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விமான பயணம்

ரயில்களில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் மனித விரல் இந்த வரிசையில் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

air india flight blade in meals

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமான பயணம் செய்த போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் ஒருவர். 

குலாப்ஜாமூனுடன் கரப்பான் பூச்சி வழங்கிய IRCTC - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பயணி

குலாப்ஜாமூனுடன் கரப்பான் பூச்சி வழங்கிய IRCTC - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பயணி

பிளேடு

பெங்களூருவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் ஏர் இந்தியாவின் AI 175 என்ற விமானத்தில் மாதுரஸ் பால் என்ற பத்திரிகையாளர் பயணம் செய்துள்ளார். பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை பயணி கண்டறிந்து உள்ளார். 

air india flight blade in meals

இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”அதிர்ஷ்டவசமாக அந்த பிளேடு போன்ற பொருளினால் எனது வாய்க்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவே ஒரு குழந்தையாக இருந்திருப்பின் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏர் இந்தியா

இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவனம் “உணவில் கிடந்த பொருள், எங்கள் சமையல் பார்ட்னர், காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என்பது தெரியவந்துள்ளது. இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு இயந்திரத்தை அடிக்கடி சோதனை செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளது. 

மேலும் இது தொடர்பாக ஏர் இந்தியா, இழப்பீடாக ஒரு வருடத்திற்கு உலகளவிலான இலவச பிசினஸ் கிளாஸ் பயணத்தை வழங்கியதாகவும், ஆனால் ”அது, தனக்கு தரப்பட்ட லஞ்சம் என்பதாலேயே, அதை நிராகரித்ததாகவும் பத்திரிகையாளர் மதுரஸ் பால் தெரிவித்துள்ளார்.