மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட்...போலீசார் கைது செய்த கருப்பு இனத்தவர் உயிரிழப்பு!
போலீஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
கருப்பு இனத்தவர்
அமெரிக்காவில் உள்ள ஒஹாயோ மாகாணத்தில் கடந்த அகில நாடுகளுக்கு முன்பு அதி வேகத்தில் வந்த கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்த தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் விபத்தை உண்டாக்கியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் அந்த பாருக்குள் அதிரடியாக நுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான, கறுப்பினத்தை சேர்ந்த ஃபிராங்க் டைசன் (53) என்பவரை கைது செய்ய முயன்றனர்.
இதனால் அவருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.அப்போது ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்டும்போது போலீசார் பலமாக அழுத்தியதில் ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உயிரிழப்பு
தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் தொடர்ந்து போலீசாரிடம் தெரிவித்தும் அவர்கள் இணங்கவில்லை. இருப்பினும் விடாமல் அழுத்தியதில் அவரால் சுவாசிக்க முடியாமல் சரிந்தார். இந்த நிலையில், நிலைகுலைந்து விழுந்ததை பார்த்த போலீசார் அவருக்கு நாடித்துடிப்பு உள்ளதா என போலீஸார் பரிசோதித்தனர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஃபிராங் கைது செய்த போது போலீஸார் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகள் மூலம் இந்த சம்பவம் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகிறது.
கறுப்பினத்தவரான ஃபிராங்க் டைசன் கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில், பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக இதேபோன்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது அதாவது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீசாரால் கைது செய்தபோது கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பிரச்சனையாக மாறியது குறிப்பிடத்தக்கது.