கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை நம்பிக்கை!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath Mar 18, 2024 12:37 PM GMT
Report

கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரோட் ஷோ நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை நம்பிக்கை! | Bjp Won More Than 400 Constituencies Annamalai

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மக்களவைத் தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்த கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.

மக்களவை தேர்தல் 2024 - திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!

மக்களவை தேர்தல் 2024 - திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!

நம்பிக்கை 

தமிழகத்தில் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை. பிரதமர் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை நம்பிக்கை! | Bjp Won More Than 400 Constituencies Annamalai

காவல் துறை அனுமதியோடு பிரதமர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பில் பிரதமரை பார்ப்பதற்கு ஜனநாயக ரீதியாக மக்களுக்கு உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. 10 மீட்டர் தொலைவில் மக்கள், பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.