மக்களவை தேர்தல் 2024 - திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!
மக்களவை தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மக்களவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
திமுக போட்டியிடும் தொகுதிகள்
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் தி.மு.க. நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் "அதன்படி, வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய மக்களவைத்தொகுதியில் நேரடியாக போட்டியிடுகின்றது.