டிரம்மிலிருந்து வீசிய துர்நாற்றம் - 6 துண்டுகளாக வெட்டப்பட்ட 70 வயது மூதாட்டி!

Karnataka India Crime Death
By Jiyath Feb 28, 2024 06:05 AM GMT
Report

மூதாட்டி ஒருவர் 6 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி கொலை 

கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுசிலம்மா (70). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தும் தனியாக வசித்து வருகிறார். பாஜக பிரமுகர் என்பதால் அவ்வப்போது கட்சி நிகழ்வுகளுக்காக வெளியூர் சென்று விடுவார்.

டிரம்மிலிருந்து வீசிய துர்நாற்றம் - 6 துண்டுகளாக வெட்டப்பட்ட 70 வயது மூதாட்டி! | Bjp Woman Figure Death And 6 Pieces Karnataka

இந்நிலையில் கட்சி பணிக்காக வெளியே சென்ற சுசிலம்மா 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் மகள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில் சுசிலம்மா வீட்டின் அருகில் இருந்த பிலாஸ்டிக் டிரம்மிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

முதல் மனைவியால் தகராறு - 2 பெண் குழந்தைகளுடன் ராயின் முன் பாய்ந்த தாய்!

முதல் மனைவியால் தகராறு - 2 பெண் குழந்தைகளுடன் ராயின் முன் பாய்ந்த தாய்!

குற்றவாளி கைது 

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் டிரம்மை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் சுசிலம்மாவின் உடல் 6 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்துள்ளது.

டிரம்மிலிருந்து வீசிய துர்நாற்றம் - 6 துண்டுகளாக வெட்டப்பட்ட 70 வயது மூதாட்டி! | Bjp Woman Figure Death And 6 Pieces Karnataka

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் சுசீலாம்மாவின் வீட்டிற்கு அருகே இருந்த தினேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. . சம்பவத்தன்று தினேஷ், சுசீலாம்மாவை சந்தித்து பணம் கேட்டுள்ளார் .

ஆனால் தினேஷுக்கு பணம் தர அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், சுசிலாம்மாவை கொலை செய்து உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் தினேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.