பாஜக பிரமுகர் கொலை - 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு!

Attempted Murder BJP Kerala Crime Death
By Sumathi Jan 30, 2024 06:59 AM GMT
Report

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை

கேரளா, பாஜக OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமாக இருந்தவர் ரஞ்சித் சீனிவாசன்.

bjp-leader-ranjith-srinivasan murder case

இந்நிலையில், இவரது வீட்டில் நுழைந்த 15 SDPI (Social Democratic Party of India) - PFI (Popular Front of India) உறுப்பினர்கள் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.

மனைவி, குழந்தைகள் முன் ரஞ்சித் சீனிவாசன் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 15- பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தூக்கு தண்டனை இல்லாமல் மரண தண்டனை - உச்ச நீதிமன்றம் தீவிர பரிசீலனை

தூக்கு தண்டனை இல்லாமல் மரண தண்டனை - உச்ச நீதிமன்றம் தீவிர பரிசீலனை

தூக்குத் தண்டனை

இந்த வழக்கு ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (Additional Sessions Court Mavelikara) விசாரணைக்கு வந்தது. அதில், தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர்கள் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை - 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு! | Kerala Court Sentences 15 Convicts To Death Bjp

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.