பாஜக பெண் வேட்பாளரின் சொத்து மதிப்பு - உற்றுநோக்கும் கட்சியாளர்கள்!
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதாவின் சொத்து மதிப்பு கூறப்பட்டுள்ளது.
பாஜக பெண் வேட்பாளர்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் களம் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் வாக்குப்பதிவு,தமிழகத்தில் முதற்கட்டம் நடந்து முடிவடைந்தது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம், செகாந்திரபாத்தை சேர்ந்தவர் மாதவி லதா(49). இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
சொத்து மதிப்பு
மாதவி லதா சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் மசூதியை நோக்கி அம்பு எய்வது போன்ற சர்ச்சைக்குரிய சைகைக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதன் காரணமாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மாதவி லதா மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில், நேற்று மாதவி லதா வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தில் பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதாவின் சொத்து மதிப்பு ரூ.221.38 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அவரது கணவர் ஃபின்டெக் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
ரூ.165.46 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், ரூ.55.91 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களை மாதவி லதா வைத்துள்ளார். அவரது குடும்பம் 94.44 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிஞ்சி லிமிடெட் நிறுவனத்தின் 2.94 கோடி பங்குகளை வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த சொத்துக்களில் ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும்.