நான் இப்போ சொன்னா சிரிப்பீங்க - 2024-இல்....! ஆருடம் சொன்ன அண்ணாமலை
வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் பெரும் வெற்றியை பெரும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேட்டி
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 2024-இல் தமிழகத்தில் இருந்து பெரும் பங்கு பிரதமர் மோடிக்கு கிடைக்கும் என கூறிய அவர், இப்பொது எந்த அரசியல் வாதிகளும் மக்களை சந்திப்பதில்லை என்றும்
விமானத்தில், காரில், காசு கொடுத்து கூட்டத்தை கூட்டிவந்தவர்களை வைத்து மாநாடு நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.
ஆனால் தான் 200 தொகுதியில் நடந்து சென்று மக்களை சந்தித்தேன் என்று கூறி, தற்போது மக்கள் complete political மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக கூறி, தமிழகத்தின் பெரிய அரசியல்வாதிகள் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்றனர் என்றார்.
1 சீட் 2 இல்ல.....
மேலும், இப்போதைய அரசியல் தலைவர்கள் இன்னும் 1960, 70-களில் எப்படி சிந்தித்தார்களோ அப்படி தான் இருக்கிறார்கள் என்று விமர்சித்து, 2024-ஆம் ஆண்டு தேர்தலை பாருங்கள். என் மனதில் ஒரு கணக்கு இருக்கின்றது , அதனை கூறினால் நீங்கள் அதிர்ச்சியாகிவிடுவீர்கள் என்றார்.
இப்போது சொன்ன சிரிப்பாங்க என்ற அண்ணாமலை, ஆனால், இந்த 2024-ஆம் ஆண்டு தேர்தல் சுனாமி போன்ற ஒரு தேர்தலாக இருக்கும் என குறிப்பிட்டு ஒரு சீட் ரெண்டு சீட் இல்லை, முழுவதுமாகவே பாஜக வசம் வரப்போகிறது என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.