இவரை நிறுத்தினால் பாஜக டெபாசிட் வாங்காது - சிக்னல் கொடுக்கும் திருச்சி சூர்யா..!
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பெரும் கூட்டணியை கட்டமைத்துள்ளது பாஜக.
பாஜக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பாஜகவிற்கு பின்னடைவு என்றாலும், இது வரை கூட்டணி கட்சிகவே இருந்த பாஜக தற்போது தமிழகத்தில் தனித்து கூட்டணி ஒன்றிற்கு தலைமை ஏற்கும் இடத்திற்கு வளர்ந்து விட்டது.
பாஜகவின் தமிழக கூட்டணியில் பாமக, த.மா.க., அமமுக, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாமாவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்குவது உறுதியாகிவிட்ட நிலையில், அமமுகவிற்கு 2 தொகுதிகளும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் திருச்சி சூர்யா கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெபாசிட் இழக்கும்
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த,
தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால், பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால், திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.
வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம் ! @ProfessorBJP pic.twitter.com/lH9kQSQkD2
— Trichy Suriya Shiva मोदी परिवार (@TrichySuriyaBJP) March 20, 2024