மோடி தமிழில் பேசினால் தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட இருக்காது - அண்ணாமலை
சேலம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை பல தலைவர்களும் உரையாற்றினார்.
சேலம் பொதுக்கூட்டம்
தொடர்ந்து தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இன்று சேலத்தில் பாஜகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். பாமகவின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஓபிஎஸ், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது வருமாறு,
அவர் மட்டும் தமிழில் பேசினால்..
400 மக்களவை தொகுதி என்பது சாதாரணம் சொல் அல்ல, அது ஒரு மந்திர சொல், அதற்காக தான் ராம்தாஸ் 2-வது முறையாக கூட்டணிக்கு வந்துள்ளார். 400'க்கு மேல் வரும்போது முழுமையாக இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டு, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படும்.
நாம் ஆட்சி வருவது உறுதி, அது சின்ன குழந்தையும் சொல்லும். தமிழகத்தில் நாம் 39 தொகுதியையும் வென்று கொடுக்க வேண்டும். மோடி சொல்கிறார் தமிழை கற்று கொள்ள முடியாமல் போனது தான் தனது மிக பெரிய வருத்தம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர் தமிழில் பேசிவருகிறார்.
அதனை நாம் பார்த்து, புதிய மனிதர்களுக்கு பகிர வேண்டும். மோடி மட்டும் தமிழில் பேசினால், தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி கூட இருக்காது.