"அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவார்" - இபிஎஸ் சொந்த ஊரில் சர்ச்சையை கிளப்பிய பாஜக..!
தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் புது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
சேலம் பொதுக்கூட்டம்
பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.தென்னிந்தியாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் மோடி, இன்று சேலத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்
இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான பாமக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், அமமுக டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பலரும் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பாக
இவர்களை மேடையில் வைத்து அறிமுகம் செய்து வைத்த போது, அடுத்ததாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுவார் என குறிப்பிடப்பட்டது.
இது பெரும் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி நடப்பது சேலம் மாவட்டத்தில் - அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் சொந்த ஊர். கட்சி கொடி, சின்னம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில்,
அதிமுக தரப்பில் இருந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்'ஸை அதிமுகவின் சார்பாக பேசுவார் என குறிப்பிட்டது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.