அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் மனு!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர தடை
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.
ஓபிஎஸ் கோரிக்கை
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் "அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இடைக்கால நிவாரணமாக இதனை வழங்க வேண்டும். வேட்பாளர், சின்னத்தை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும்; அதிமுகவின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.