தென்னிந்தியாவில் இம்முறை பெரிய கட்சியாக பாஜக தான் இருக்கும் - பிரதமர் மோடி உறுதி
நாட்டின் மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றியை பெறும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மோடி உறுதி
மக்களவை தேர்தலுக்காக தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த வருகிறார் பிரதமர் மோடி. அவ்வாறு அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரின் கருத்துக்கள் வருமாறு,
முழு நாட்டிற்கும் எங்களது உத்தி ஒன்றுதான். பிர் ஏக் பார் மோடி சர்க்கார். அவுர் 4 ஜூன் 400 பர் (மீண்டும் மோடி அரசு - மற்றும் 4 ஜூன் 400 மேல்) என்று மோடி கூறினார். தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பலம் இல்லை, இருப்பு இல்லை என தம் எதிரிகள் கட்டுக்கதையை உருவாக்கியுள்ளனர் என்றார் மோடி.
2019 தேர்தலைப் பாருங்கள். அப்போதும் தெற்கில் மிகப்பெரிய கட்சி பாஜகதான். மீண்டும், நான் இதைச் சொல்கிறேன்: இந்த முறை தெற்கில் மிகப்பெரிய கட்சியாக பாஜக இருக்கும், அதன் கூட்டணி கட்சிகள் அதற்கு அதிக இடங்களை சேர்க்கும் என்று அவர் கூறினார்.
தென்னிந்தியாவில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாகவும், கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம் என்றார் மோடி.
மனம்-பகிர்வில் நாங்கள் ஏற்கனவே ஒரு உயர்வைக் கண்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு மற்றும் வாக்குப் பங்கீடு ஆகியவற்றில் பெரிய முன்னேற்றத்தைக் காண்போம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
543 மக்களவைத் தொகுதிகளில் தென்னிந்தியாவில் 131 இடங்கள் உள்ளன. கர்நாடகாவில் இருந்து ஒரு சுயேச்சை ஆதரவுடன் பாஜகவுக்கு 29 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.