அதிமுக கூட்டணிக்கு முயற்சிக்கும் பாஜக - ஜி.கே.வாசன் சந்திப்பு பின்னணி இது தானா..?

G. K. Vasan Tamil nadu ADMK BJP
By Karthick Feb 03, 2024 11:30 AM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - பாஜக

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

gk vasan trying for admk bjp alliance

அதிமுக தரப்பு திட்டவட்டமாக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், பாஜக அதிமுக கூட்டணிக்கு முயற்சிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜி.கே.வாசன் விளக்கம்

நேற்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

gk vasan trying for admk bjp alliance

ஆனால், இது பாஜகவின் முயற்சியால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பு என்றும், ஜி.கே.வாசனை வைத்து அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

gk vasan trying for admk bjp alliance

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூட்டணி குறித்தும், அரசியல் நகர்வுகள் குறித்தும் கட்சி ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தான் தெரிவிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அதிமுகவின் கூட்டணிக்கு செல்லும் த.மா.கா..? திடீர் சந்திப்பு..!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அதிமுகவின் கூட்டணிக்கு செல்லும் த.மா.கா..? திடீர் சந்திப்பு..!

அதே போல, பேச்சுவார்த்தையின் போது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டார் ஜி.கே.வாசன். அதே போல, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்போதும் கூட்டணி இல்லை என்பதை எப்போது உறுதிபட தெரிவித்து விட்டோம் என மீண்டும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.