கவனம் ஈர்த்த ஜிலேபி; பார்சல் அனுப்பிய பாஜக - பின்னணி என்ன?

Rahul Gandhi BJP Haryana
By Sumathi Oct 10, 2024 10:10 AM GMT
Report

 ஜிலேபி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

 ஜிலேபி விவகாரம்

ஹரியானா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஹோகானா என்ற இடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ஜிலேபி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம்.

rahul gandhi

ஆனால், அதற்கு தேவையான கடன் உதவியை மோடி அரசு வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஹரியானாவில் பாஜக 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

30 வருஷங்களா அந்த அழுத்தம்தான் - ஒருவழியாக.. திருமணம் குறித்து பேசிய ராகுல் காந்தி!

30 வருஷங்களா அந்த அழுத்தம்தான் - ஒருவழியாக.. திருமணம் குறித்து பேசிய ராகுல் காந்தி!

பாஜக செய்த செயல்

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் வீட்டிற்கு சுமார் 600 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ ஜிலேபியை பாஜக பார்சலாக அனுப்பி வைத்துள்ளது. போபாலில் பாஜகவினர் ஒருவருக்கொருவர் ஜிலேபி வழங்கி தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

கவனம் ஈர்த்த ஜிலேபி; பார்சல் அனுப்பிய பாஜக - பின்னணி என்ன? | Bjp Trolls Rahul Gandhi Over Jalebi Congress

மேலும், லக்கிம்பூர் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற பாஜக தொண்டர் ஒருவர் அங்கிருந்த நிர்வாகிகளுக்கு ஜிலேபி வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் இதுதொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை காங்கிரஸ் பகிர்ந்தது. எனவே ஜிலேபி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.