2-வது பெரிய கட்சியாகும் பாஜக..! வெற்றி மாலை சூடும் திமுக..! அதிமுக - நா.த.க நிலை..?

Naam tamilar kachchi Tamil nadu ADMK DMK BJP
By Karthick Feb 08, 2024 07:40 PM GMT
Report

வெளியான சர்வே ரிப்போர்ட்.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

போட்டி

திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி, தனித்து களம் காணும் நாம் தமிழர் என பிரதான கட்சிகள் போட்டிக்கு தயாராகிவிட்டன.

bjp-to-became-2nd-largest-party-in-election

இதில் திமுக கூட்டணிக்கு தான் பெரும்பாலான இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கள் வெளியாகி வரும் சூழலில், தொகுதி பங்கீடு பிரச்சனை திமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

bjp-to-became-2nd-largest-party-in-election 

திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாஜக - அதிமுக போன்ற கட்சிகள் கைப்பற்றும் என கூறப்படும் நிலையிலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் இன்னும் அக்கட்சி பக்கம் தான் நிற்கிறார்கள்.

லேட் தான் ஆனா கரெக்ட்டான முடிவு...அதிமுக பாஜக கூட்டணி முறிவு...சீமான் வரவேற்பு..!

லேட் தான் ஆனா கரெக்ட்டான முடிவு...அதிமுக பாஜக கூட்டணி முறிவு...சீமான் வரவேற்பு..!

இந்நிலையில், சமீபத்தில் இந்தியா டைம்ஸ் கருத்துக்கணிப்பை தமிழ்நாடு லோக் சபா தேர்தலை குறித்து வெளியிட்டுள்ளது. அதில், மாநில ஆளும் கட்சியான திமுக மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 36'ஐ 59.7% ஓட்டுக்களுடன் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bjp-to-became-2nd-largest-party-in-election

அதே போல, தமிழ்நாட்டில் முதல் முறையாக பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக 20.4% வாக்குகளுடன் 1 இடத்தை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது பெரிய கட்சியாக வாக்குகளின் சதவீதத்தில் பாஜக இடம்பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் அதிமுக 16.3% வாக்குகளுடன் 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.