டார்கெட் 2026 - அண்ணாமலை தலைமையில் இன்று தமிழ்நாடு பாஜக கூட்டம்
பாஜக
தமிழகத்தில் ஆழமாக கால் ஊன்ற தேசிய கட்சியான பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி கூட்டணி அமைத்து தேர்தலில் சந்தித்த அக்கட்சி, 40 தொகுதிகளிலும் தோல்வியையே சந்தித்தது.
அதே நேரத்தில், வாக்குசதவீதத்தில் பாஜக கணிசமான முன்னேற்றத்தை காட்டியுள்ளது. தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே கட்சிக்குள் சற்று சலசலப்புகள் உருவானது. அவை தலைப்பு செய்திகளாக மாறிய நிலையில், சட்டென அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் வைக்கப்பட்டான.
மீட்டிங்
தமிழிசையை அவரது வீட்டில் சந்தித்து பேசினார் அண்ணாமலை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மும்முரம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இன்று பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை கமலாலயத்தில் தற்போது இந்த கூட்டம் அண்ணாமலை தலைமையில்நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய மாவட்ட - மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.