ஆட்டை வெட்டுவது போல வெட்டுவோம்'னு மிரட்டுறாங்க!! பாஜக பொதுச்செயலாளர் புகார்
சமூகவலைத்தளங்களில் வெட்டுவோம் என மிரட்டல் வருவதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகார்
இன்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அப்போது பேசியது வருமாறு, கன்டென்ட் என்னனா யார் அத பதிவு பன்றாங்க. எப்படி பதிவு பண்றாங்க'னு தெரியாது. அடுத்ததை வெட்டி உங்களையும் அப்படி தான் வெட்டுவோம் சொல்லும் போது, நான் நிறைய பதிவுகளை கடந்து போய்ட்டேன்.
தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்கும் போது, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்'னு சொல்லி. இது புகார் மட்டுமில்லை இத ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.
ஆட்டை நாடு தெருவிற்கு கொண்டு வந்து அண்ணாமலையின் புகைப்படத்தை காட்டி வெட்டுவது கிருஷ்ணகிரியில் இருக்கும் காவல் துறையினருக்கு தெரியாதா. இது நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
எங்க போச்சு சமூகநீதி
மோசமான அரசியல் காழ்புணர்ச்சியை பார்ததில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பத்திரிகையில் வந்துள்ளது. அண்ணாமலையையும் இப்படி தான் வெட்டுவோம்'னு சொல்ற அளவிற்கு துணிந்திருக்கிறார்கள். நேரடியாக அரசியலில் மோதி ஜெயிக்க துப்பில்லை. அன்னைக்கே ஆடு வெட்டப்படும் போதே தடுத்திருந்தால், யாருமே அத சகிச்சிக்க மாட்டாங்க.
அதனால் தான் தொடர்ந்து அடுத்தவங்களுக்கு கொலை மிரட்டல் விடுறாங்க.
இதனை இலகுவாக கடந்து போகிறார்கள் என்றால், தமிழகத்தில் நிச்சயமாக ஒரு பிரச்சனையை சந்திக்க போகிறார்கள். இது அரசியல் பழிவாங்குதல் அல்ல. அரசியல் அநாகரீகம்.
சமூகநீதி பேசும் இத்தனை அரசியல் வாதிகள் இருக்காங்களே. ஒருத்தர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. திமுகவை சேர்ந்தவர்கள் தான் கொண்டாடினார்கள் என பத்திரிகையில் வருது.
சமூகநீதி'லாம் எங்க போகுது. எல்லாம் அறிவாலயம் வாசல் வரை தானா.