பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோய் இருக்கு - எஸ்வி சேகர் விமர்சனம்..!

BJP K. Annamalai
By Thahir Jul 16, 2023 10:05 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் தொடங்கியுள்ள இரவு நேர பயிலகம் வரவேற்க்கத்தக்கது என்றார்.

BJP state president Annamalai has diabetes

அரசியலுக்கு வருபவர்கள் காமராஜனரின் வழியை பின்பற்றினால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு பாதிக்கப்படுமே, நமக்கு பிரச்சனை வருமே என்று நினைப்பவர்கள் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார். விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்தால் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடும் விமர்சனம் 

மேலும் பேசிய அவர், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலைக்கு சுகர் (சர்க்கரை நோய்) இருக்குமோ என்று தெரியவில்லை, தினமும் நடக்க வேண்டுமென டாக்டர் கூறி இருக்கலாம்.

BJP state president Annamalai has diabetes

நடை பயணத்தால் எந்த வித பிரயோஜனமும் இல்லை. சும்மா மிஸ்டு காலை வைத்து கொண்டு எங்களிடம் இத்தனை பேர் உள்ளனர் என்று கூறுவதெல்லாம் நாமலே நம்மை புகழ்ந்து கொள்வது போன்றது என கூறினார்.