பாஜக தேர்தலுக்காக ரூ.39.41 கோடி செலவா? அதுவும் மூன்றே மாதத்தில்!
ஆன்லைன் விளம்பரங்களுக்கு பாஜக 39.41 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாஜக தேர்தல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகினற்னர். அந்த வகையில் பாஜக சார்பில் தொலைக்காட்சி மற்றும் இணையவழி விளம்பரங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
மோடியின் கேரண்டி என்ற ஏராளமான விளம்பரங்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பப்படுகிறது. அதன் படி டிஜிட்டல் விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக கடந்த மூன்று மாதங்களில் கூகுள் மூலம் 80,667 விளம்பரங்களை செய்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
ரூ.39.41 கோடி
கடந்த மாதம் தொடங்கி நடந்துமுடிந்த மார்ச் வரை ஆன்லைன் மூலம் அக்கட்சி 80,667 விளம்பரங்களுக்காக ரூபாய் 39.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றுள் உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக செலவாகியுள்ளது.
அதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3.88 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.