தேசிய கொடியை அவமதித்தாரா உதயநிதி? புகைப்படத்தால் சர்ச்சையை கிளப்பும் பாஜக

Udhayanidhi Stalin India's Republic Day BJP
By Karthikraja Jan 26, 2025 07:30 AM GMT
Report

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்து விட்டதாக பாஜக மாநில செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியரசு தின விழா

இந்தியாவின் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

republic day in tamilnadu

அதேபோல் அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். தமிழக அரசு சார்பாக சென்னை மெரினா கடற்கரை சாலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. 

குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டாங்க - ஏன் தெரியுமா?

குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டாங்க - ஏன் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின்

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

udhayanidhi stalin national flag

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்தாக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்திய தேசிய கொடியை சட்டையின் இடதுபுறத்தில் அணியாமல் வலது பக்கம் அணிந்து அவமதித்துள்ளார்.

பாரத திருநாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதையே வாடிக்கையாக கொண்டு திமுகவினர் செயல்படுகின்றனர். வெட்கப்படுங்கள் உதயநிதி! நமது தேசத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அவமானம். கட்சி விசுவாசம் தேசிய மரியாதையை விட மேலானதா?" என கூறியுள்ளார்.