ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை; இதையாவது செய்யுங்க ரஜினி - நெருக்கடி தரும் பாஜக!
ஆதரவாக குரல் கொடுக்க ரஜினிகாந்தை பாஜக வட்டாரங்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், திடீரென அந்த முடிவில் இருந்து அவர் பின் வாங்கினார். தற்போது சினிமா பணிகளை மட்டும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
பாஜக நெருக்கடி
இதனால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க முயற்சிகளை பாஜக எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பத்தாண்டு கால பாஜக சாதனைகள் குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டாலே போதும் எனவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, நேரடியாக பாஜகவுக்கு செல்லாவிட்டாலும் பாஜக ஆதரவு கருத்துக்களை அவ்வபோது ரஜினிகாந்த் தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.