ஆபாச படத்தை வெளியிடுவேன் - தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவர்!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவரை ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக, பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
4 பேர் மிரட்டல்
அதன் அடிப்படையில், மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.