வெளிநாட்டில் அண்ணாமலை; தமிழிசையிடம் பொறுப்பு? அதிமுகவை இழுக்கும் ப்ளானில் பாஜக!
அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக பல திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜக திட்டம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக வருகிற செப்டம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் லண்டன் செல்லவுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மூலம் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவராக உள்ளார். அங்கு செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது.
பொறுப்பில் தமிழிசை?
இதுகுறித்து பேசிய அவர், "கட்சித் தலைமை அனுமதி அளித்த பிறகே வெளிப்படையாகப் பேச முடியும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆட்சியைப் பிடிக்க 35% வாக்குகள் தேவை. அது பாஜக மற்றும் பாமகவை மட்டுமே வைத்திருந்தால் நடக்காது.
கட்டாயம் அதிமுக கூட்டணிக்குள் வரவேண்டும். அப்போதுதான் திமுகவை எதிர்க்க முடியும்.
ஆகவே, அண்ணாமலை இல்லாத இந்த 12 வார இடைவெளியில் அதிமுகவுடன் கூட்டணிக்காக பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், தமிழிசைக்கு மாநிலத் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்வுள்ளதாகவும் தகவல் கசிந்து வருகிறது.