தமிழக அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அண்ணாமலை - அதிரும் பாஜக?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
அண்ணாமலை
தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை உண்டாக்கி உள்ளார் அண்ணாமலை.பாஜகவின் தமிழக தலைவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பேட்டிகளால் பல தரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளார்.
அவர் தற்போது லண்டனில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பயிலவுள்ளார். இது தொடர்பாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தது. செப்டம்பர் மாதத்தில் அவர் இந்த படிப்பிறகாக லண்டன் செல்லவுள்ளார்.
அவர் 6 மாதம் இந்த படிப்பில் கவனம் செலுத்துவர் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர் இல்லாத நேரத்தில் தமிழக பாஜகவின் தலைவராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த படிப்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில், தமிழக அரசியலில் இருந்து அண்ணாமலை 6 மாதங்களுக்கு ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.