சர்வதேச அரசியல் படிக்க ..ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புறப்படும் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விரைவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க செல்லவுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து தமிழக அரசியலில் கால் பதித்தார். அவர் மீது ஆரம்பத்தில் பெரிய அரசியல் வெளிச்சம் இல்லை.

ஆனால், அடுத்த 3 ஆண்டுகள் தற்போது தமிழக அரசியலின் ஒரு மையப்புள்ளியாக மாறியிருக்கிறார் அண்ணாமலை. பேட்டிகளில் அவர் காட்டும் அதிரடிகளும், டக் டக் என பேசும் தன்மையும் அவரை முன்னணி தலைவராக முன்னிறுத்தியுள்ளார்.
இந்திய அரசியலும் அவர் தற்போது முக்கிய நபராக முன்னேறியுள்ளார். இந்நிலையில் தான், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பு ஒன்றை படிக்க அவர் தேர்வாகியுள்ளார்.
சர்வதேச அரசியல்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் "சர்வதேச அரசியல்" என்ற தலைப்பிலான படிப்பை பயில, தேர்வாகியுள்ளார். இந்த படிப்பு சுமார் 17 வாரங்களை கொண்ட படிப்பு ஆகும். இந்தியாவில் இருந்து 12 பேர் இப்படிப்பினை தேர்வாகியுள்ளார்கள். அவர்களில் அண்ணாமலையும் ஒருவர்.

ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தின் "செவனிங்" உதவித்தொகை (scholarship) மூலம் சர்வதேச அரசியல் படிப்பிற்கு அண்ணாமலை தேர்வாகி உள்ளார். இந்த உதவி தொகை படிப்பு மற்றும் தங்குவதற்கான அனைத்து செலவையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்கிறது. இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil