ஓட ஓட விரட்டி வெடிகுண்டு வீசி பாஜக முக்கிய நிர்வாகி கொலை - பயங்கர சம்பவம்
பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.
பாஜக நிர்வாகி
ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் பிபிஜி சங்கர். இவர் பாஜக எஸ்சி - எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சென்னைக்கு காரில் சென்றுள்ளார்.
அதன் பின் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரேத் பேட்டை சிக்னல் அருகே வந்தபோது காரை வழிமறித்து அந்த கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.
வெட்டி கொலை
இதனால், இறங்கி ஓடிய அவரை அந்த கும்பல் தொடர்ந்து விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சங்கர் மீது சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.