முதல்வர் - பெரியார் குறித்து அவதூறு கருத்து? தொடரும் பாஜக நிர்வாகிகள் கைது!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறு கருத்து
தூத்துக்குடி மாநகரில் உள்ள புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜனின் மகன் ஜான் ரவி. 52 வயதாகும் இவர் தொழிலதிபராக இருந்து வரும் இவர் சென்னையில் தனது தொழில்களை நடத்தி வருகின்றார்.
மேலும், பாஜக கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் ஜான் ரவி இருந்து வருகிறார். அதன் காரணமாக இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து திமுகவினர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்
இந்நிலையில், சமூகவலைதள பக்கத்தில் இவர் அண்மையில் திமுக ஆட்சியை பற்றியும் குறை சொல்லும் பாணியில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றோரை விமர்சித்தும் பெரியார் பற்றியும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஜான் ரவி, பெரியார் குறித்து தகாத வார்த்தைகளை பதிவு செய்திருந்தார் என கூறப்படும் நிலையில், ஜான் ரவியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மதுரை சைபர் கிரைன் போலீசார் ஜான் ரவியின் சொந்த ஊரான தூத்துக்குடி புது கிராமத்தில் அவரது இல்லத்தில் வைத்து ஜான் ரவியை கைது செய்தனர்.
மதம் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் வதந்திகளை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் பின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மதுரை மேஜிஸ்ட்ரேட் அழைத்துச் செல்லப்பட்டார்.