நெய்க்கு அலையும் முதல்வர்!! முட்டையை காண்பிக்கும் உதயநிதி!! அன்புமணி காட்டம்!!
சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பு
நேற்று திருநெல்வேலியில் ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உரிமை இருந்தும் ஏன் நடத்தவில்லை? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்த பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது வெண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் சூழல் என விமர்சனம் செய்தார்.
திமுகவின் பொய்யான வாக்குறுதி
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், சமூகநீதி பேசும் தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம் என வினவி, சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் இல்லை என்றால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
இன்று கையெழுத்தி இயக்கம் நடத்தலாம் இன்றைக்கு முட்டையை காண்பிக்கலாம் - ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரே வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியதை சுட்டிக்காட்டி, திமுக ஒரு பொய்யான வாக்குறுதி தரக்கூடாது என்றார்.
மேலும், கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.