நெருங்கும் தேர்தல் முடிவுகள் - நாளை தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் - அண்ணாமலை அதிரடி
வரும் ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவருக்குகிறது.
தேர்தல் முடிவுகள்
நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு மட்டுமே மிச்சமிருக்கிறது. ஜூன் 1-ஆம் தேதி அத்தேர்தல் நடைபெறும் நிலையில், ஜுன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளிவரவிருக்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் மெல்ல தேர்தல் முடிவுகள் நோக்கி நகர்ந்து வருகின்றது. இது பாஜகவிற்கு முக்கியமான தேர்தலாகும். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக தெரிவிக்கும் அந்த அரசு மீண்டும் மோடி என்ற முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றது.
கூட்டம்
பெரிய கேள்வியே மோடி மீண்டும் பிரதமராவாரா? என்பது தான். அதே போல தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கு இது முக்கியமான ஒன்று. தமிழக அரசியலில் அவர் சந்திக்கும் பெரிய சவாலே இதுவரை ஒரு கவுன்சிலர் கூட அவர் வெல்லவில்லை என பிற கட்சிகள் வைப்பதே.
அதனை உடைக்கும் நோக்கில், தற்போது கோவை மக்களவை வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அண்ணாமலை. தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், இன்று (மே 27) தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.