Saturday, Jul 12, 2025

திறந்து 2 நாள் தான் ஆகுது- பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Tamil nadu BJP K. Annamalai
By Karthick a year ago
Report

சென்னை மயிலாப்பூரில் கோவில் இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக அலுவலகம்

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழக பாஜகவின் சார்பில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பாஜக அலுவலகத்தில் முகப்பில் இருந்த ராமர் படம்...தூரமாக எடுத்து வைத்த அண்ணாமலை..!

பாஜக அலுவலகத்தில் முகப்பில் இருந்த ராமர் படம்...தூரமாக எடுத்து வைத்த அண்ணாமலை..!

இதில், சென்னை மயிலாப்பூரில் நேற்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. திறந்து இரண்டே நாளான இந்த அலுவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகவுள்ளது.

bjp-office-in-chennai-got-sealed-

இதன் காரணமாக இந்த அலுவலகத்திற்கு அறநிலைய துறை நிர்வாகிகள் சீல் வைத்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்காக பெறப்பட்ட நிலத்தை அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.