தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக: எகிறும் தலைவலி, அடுத்து என்ன நடக்கும் - பரபரப்பில் களம்!
தனிப்பெரும்பான்மை இழந்தால் அரசியல் நடைமுறை என்னவாக இருக்கும்?
தனிப்பெரும்பான்மை
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களும், பாஜகவுக்கு தனியாக 370 தொகுதிகளும் கிடைக்கும் என்று தொடர்ந்து பாஜகவினர் கூறிவந்த நிலையில், பாஜக 293 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையே தொடர்கிறது. 543 இடங்கள் (2 நியமன எம்.பி.க்கள்) கொண்ட மக்களவை தொகுதிகளில், 272 இடங்களில் வென்றால் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும்.
அரசியல் நடைமுறை
அதிக இடங்களை வென்ற கட்சி என்ற நிலையில் பாஜகவையே ஆட்சியமைக்க குடியரசு தலைவர் முதலில் அழைப்பார். ஒரு கூட்டணியால் பெரும்பான்மையை நிருபிக்கமுடியாவிட்டால், குடியரசு தலைவர் ஆலோசனையில் ஈடுபட்டு, இறுதி முடிவை அவரே எடுப்பார்.
அப்போது அவரால், இரண்டு முடிவுகளை எடுக்க முடியும். மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பார். அப்போது எந்த கட்சி/கூட்டணி பெரும்பான்மையை நிருபிக்கிறதோ, அவர்களால் ஆட்சியமைக்க முடியும். அப்படி எவராலும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாவிட்டால், மறுதேர்தல் நடைபெறும். இது குடியரசு தலைவரின் விருப்புரிமையாகவே இருக்கும்.
இதை தவிர பிற கட்சியினர் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரித்தால், அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி மைனாரிட்டி ஆட்சி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.