பலமுறை எச்சரிக்கை; அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபர பேட்டி

Tamil nadu AIADMK BJP
By Sumathi Sep 18, 2023 09:31 AM GMT
Report

அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கட்சி முடிவையே நான் சொல்கிறேன்.

பலமுறை எச்சரிக்கை; அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபர பேட்டி | Bjp No Allience With Admk Says Ex Mp Jeyakumar

தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. கூட்டணி தர்மம் குறித்து பேசுவதை அதிமுக தொண்டர்கள் சகித்து கொள்ளமாட்டார்கள். பல முறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார் அண்ணாமலை.

தேவையற்ற சுமை

அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது . தன்னை முன்னிலைப்படுத்தவே தொடர்ந்து தலைவர்களை அவமதிக்கிறார். பாஜக கூடுதல் சுமை மட்டுமல்ல; தேவையற்ற சுமை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?

பலமுறை எச்சரிக்கை; அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபர பேட்டி | Bjp No Allience With Admk Says Ex Mp Jeyakumar

சிங்க கூட்டமான அதிமுகவை பார்த்து சிறு நரியான அண்ணாமலை ஊளையிடுவதா?அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.