நான் முதல்வர் வேட்பாளர் இல்ல.. இவருதான்..நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

Tamil nadu ADMK BJP Edappadi K. Palaniswami Nainar Nagendran
By Sumathi Nov 14, 2025 03:06 PM GMT
Report

எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் 

நெல்லை, வண்ணாரப்பேட்டை அருகே உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

annamalai - nainar nagendran

“பிகார் மாநிலத்தின் தேர்தல் வெற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.190க்கு மேல் வைத்து வாய்ப்புகள் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலினும் பீகார் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.

உண்மையிலேயே மக்கள் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசின் ஆட்சிக்கும் நித்திஷ் குமார் செய்த ஆட்சிக்கும் மீண்டும் அங்கீகாரம் தருகின்ற வகையில் வெற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மாலைக்குள் எல்லாம் முடிவுகளும் வந்துவிடும்.

பீகாரில் நல்லதொரு ஆட்சி நடைபெறும். பிரதமர் மோடியின் தலைமையில் நல்லாட்சியும் அமையும். இஸ்லாமியர்களுடன் நான் மாமா மச்சான் என்று தான் பழகி வருகிறேன். ஆனால் சிஏஏ போன்ற சட்டங்கள் மூலமாக இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்கள்.

நான் மண்ணையா தின்னு வாழ முடியும்? கொதித்த அண்ணாமலை

நான் மண்ணையா தின்னு வாழ முடியும்? கொதித்த அண்ணாமலை

நயினார் உறுதி 

தமிழக பாஜகவுடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. இப்போதும் நாங்கள் வலுவாக தான் இருக்கிறோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. மக்கள் மனது வைத்தால் தான் பீகாரில் வெற்றி கிடைக்கும். பாஜகவில் யார் நினைத்தாலும் முதலமைச்சர் ஆகலாம்.

நான் முதல்வர் வேட்பாளர் இல்ல.. இவருதான்..நயினார் நாகேந்திரன் ஆவேசம்! | Bjp Nainar Nagendran About Cm Candidate

அமைச்சர் சேகர் பாபு எனது நண்பர்தான், நேற்று கூட அவருக்கு தொலைபேசியில் அழைத்தேன் கிடைக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர். தமிழக முதலமைச்சருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் நட்பு ஆழமானது.

பீகாரில் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்து போனவர்கள். இல்லாதவர்களை எப்படி அந்த இடத்தில் வாக்காளர்களாக போட முடியும்? இந்தியாவில் தேசப்பற்று அதிகமானவர்களுக்கு குறைந்து போய் உள்ளது. பீகாரில் நடைபெறும் சம்பவத்திற்கும் டெல்லியில் நடைபெறும் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

ஒன்றிய உள்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதையும் மீறி சில சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது. திமுகவினர் தான் எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி வருகிறார்கள் என தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்ப இருக்கிறேன்.

கேரளாவில் பாஜக கட்சி வளர்ந்து வருகிறது.கஞ்சா போதை பொருட்களை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. வைகோ நடை பயணம் மேற்கொள்ளவே தேவையில்லை. நேரடியாக முதல்வரிடம் கூறினாலே போதும். வயதான காலத்தில் ஏன் பாவம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.எனக்கு எந்த வெடிகுண்டு மிரட்டல்களும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.