தமிழ்நாட்டு பாடகியை திருமணம் செய்யும் பாஜக எம்பி - யார் தெரியுமா?
தமிழ்நாட்டு பாடகியை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாதிருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேஜஸ்வி சூர்யா
பெங்களூர் தெற்கு தொகுதியின் எம்.பியாகவும், பாஜகவின் இளைஞரணி தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் தேஜஸ்வி சூர்யா. இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இவருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகியான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்திற்கும் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்
சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு கர்நாடக இசைப் பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் ஆவார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் துறையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ பட்டமும், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் கன்னட பதிப்பிற்கு ஹெல்கே நீனு என்ற பாடலையும் பாடியிருந்தார். இவரது யூ டியூப் சேனலை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். கடந்த 2024 ஜனவரி மாதம் கடவுள் ராமர் குறித்த இவர் பாடல் பாடியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றார்.
இந்த திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் பிரபலங்கள் சினிமா துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திருமணம் குறித்து தேஜஸ்வி சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.