தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை தான் - தேஜஸ்வி சூர்யா திட்டவட்டம்
தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர் அண்ணாமலை என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி சூர்யா
கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பெங்களூருவில், நாடளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதில், பாஜகவின் நம்பிக்கை வேட்பாளரான சோமண்ணா, தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் கணிசமாக வெற்றி பெறுவார். அனைத்து சவால்களையும் வலிமையை எதிர்கொள்வோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் சித்தாராமையா தோற்கடிக்கப்படுவார்.
தமிழக முதல்வர்?
தொடர்ந்து, அண்ணாமலையை அறிமுகப்படுத்தி பேசிய அவர், தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர் எனத் தெரிவித்தார். இதையடுத்து, பேசிய அண்ணாமலை, " ஒட்டுமொத்த கர்நாடக அரசியல் பிம்பத்தை சோமண்ணா மாற்றுவார். தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்" எனத் தெரிவித்தார்.
மைசூர் மாவட்டத்தை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர் சோமண்ணா முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.