பிரதமரின் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை; இதுதான் காரணம் - பரபர தகவல்
மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி வருகை
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாக்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி என எதிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் கர்நாடக வேட்பாளர் பட்டியலை தேர்வுசெய்யும் பணிக்காக டெல்லி சென்றார்.
என்ன காரணம்?
அங்கு கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருடன் தங்கி கடந்த 2 நாட்களாக பணியாற்றி வருகிறார். இருப்பினும் பிரதமரின் அனுமதியை பெற்று தான் அவர் அங்கு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், பிரதமர் மோடி நிகழ்ச்சியை அண்ணாமலை புறக்கணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.