மதக்கலவரத்தை தூண்டினார்..? தேர்தல் நேரத்தில் கைதான கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா
தேர்தல் நெருங்கும் சூழலில், தொடர்ந்து கர்நாடக பாஜகவில் சலசலப்புகள் நீடிக்கிறது.
கர்நாடக பாஜக
வரும் மக்களவை தேர்தலை குறிவைத்து பாஜக தீவிரமாக வேலை செய்து வரும் கர்நாடகாவில் சற்று சலசலப்புகள் அக்கட்சியில் நிலவுகிறது.
அக்கட்சியின் பாஜகவின் முக்கிய முகமாக திகழ்ந்த எடியூரப்பா மீது சில தினங்கள் முன்பு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கின் தீவிரம் அடங்குவதற்குள்ளாகவே அடுத்த விவகாரம் வெடித்துள்ளது.
தேஜஸ்வி சூர்யா
இந்தியாவின் இளம் மக்களவை உறுப்பினர்களில் ஒருவராக இருந்த தேஜஸ்வி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா, ‘ஆஸான்’ நேரத்தில் ‘பஜன்’ இசைத்ததற்காக கடைக்காரர் ஒருவர் தாக்கப்பட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஆஸான்' நேரத்தில் "அதிக ஒலியில்" இந்து பக்தி பஜனை வாசித்ததற்காக ஒரு கடைக்காரர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக 3 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.