மனைவியின் நலனே முக்கியம் - 25 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பாஜக எம்.பி
பாஜக எம்பி ஒருவர் மனைவிக்காக 25 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கர்வா சௌத்
கணவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று மனைவிகளும், நல்ல கணவர் அமைய வேண்டுமென்று திருமமாகாத இளம்பெண்களும் கர்வா சௌத் என்ற விரதம் இருப்பர்.
ஐப்பசி மாதம் பௌர்ணமி 4ஆம் நாளில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் உள்ள குடும்பங்களில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
25 ஆண்டுகளாக விரதம்
இந்நிலையில் பாஜக எம்பி ஒருவர் தனது மனைவி நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று கடந்த 25 ஆண்டுகளாக இந்த விரதத்தை இருந்து வருகிறார்.
இது குறித்து பேசிய டெல்லி, சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி பிரவீன் கண்டெல்வால் "ஒரு குடும்பத்தை இயக்கும் இரு சக்கரங்களாக கணவனும் மனைவியும் விளங்குவதாகவே நான் நம்புகிறேன்.
கணவருக்காக மனைவி இவ்விரதத்தை கடைப்பிடிக்கும்போது, மனைவி நலமாக நீண்ட நாள் வாழ கணவர்களும் ஏன் இவ்விரதத்தை கடைபிடிக்கக்கூடாது? கடந்த 25 ஆண்டுகளாக நான் இவ்விரதத்தை கடைப்பிடித்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.